எச்1-பி விசா கட்டண உயர்வு; மத்திய அரசு சொல்வது என்ன?

அமெரிக்காவின் எச்1பி விசாவுக்கான ஓராண்டு கட்டணம் ரூ.1.32 லட்சத்தில் இருந்து திடீரென ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது;

Update:2025-09-21 11:09 IST

புதுடெல்லி,

இந்திய தொழிலாளர்கள் அதிக அளவில் பயன்பெறும் எச்1-பி விசாவுக்கான கட்டணத்தை சுமார் ரூ.88 லட்சமாக அமெரிக்கா உயர்த்தி இருக்கிறது. இது இந்தியாவில் அரசு மற்றும் மக்களிடையே பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘எச்1-பி விசா கட்டண உயர்வு இந்திய குடும்பங்களுக்கு ஏற்படுத்தும் இடையூறுகள் மூலம் மனிதாபிமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்’ என தெரிவித்தார். மேலும், இந்த இடையூறுகளை அமெரிக்க அதிகாரிகள் தகுந்த முறையில் நிவர்த்தி செய்ய முடியும் என மத்திய அரசு நம்புவதாகவும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்