அரியானா: கால்வாயில் வாகனம் கவிழ்ந்து விபத்து 9 பேர் பலி

வாகனம் கால்வாயில் விழுந்த இடத்திலிருந்து சுமார் 50-55 கிலோமீட்டர் தொலைவில் உடல்கள் மீட்கப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-02-02 05:37 IST

கவுகாத்தி,

அரியானா மாநிலம், பதேஹாபாத் மாவட்டத்தில் 14 பயணிகளுடன் சென்ற வாகனம் வெள்ளிக்கிழமை இரவு பக்ரா கால்வாயில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் 5 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உள்பட 9 பேர் பலியானார்கள். மேலும் 3 பேர் மாயமானதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

பஞ்சாப் மாநிலம் பாசில்கா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டு வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். அடர்ந்த பனிமூட்டம் காரணமாக, சர்தரேவாலா கிராமம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், பக்ரா கால்வாயில் கவிழ்ந்தது.

இதுவரை 9 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் மூன்று பேரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. வாகனம் கால்வாயில் விழுந்த இடத்திலிருந்து சுமார் 50-55 கிலோமீட்டர் தொலைவில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பலியானவர்களில் ஐந்து பெண்கள், 11 வயது சிறுமி மற்றும் ஒரு வயது குழந்தை அடங்குவர். மீட்புப் பணியில் சுமார் 50 பேர் ஈடுபட்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்