ஐதராபாத்: அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள பாரில் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து

அடுக்குமாடி கட்டிடத்தில் இயங்கி வரும் பாரில் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.;

Update:2024-12-21 16:58 IST

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மாதாபூர் அருகே நாலெட்ஜ் சிட்டி அடுக்கு மாடி கட்டிடத்தின் 5-வது தளத்தில் மதுபான பார் மற்றும் உணவகம் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு பார் மூடப்பட்ட நிலையில், இன்று அதிகாலை அங்கு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

சமையலுக்காக வைக்கப்பட்டிருந்த சிலிண்டகள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்திற்கு அருகே உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்