பிரதமர் மோடியுடன் உலக கோப்பை வென்ற மகளிர் அணியினர் சந்திப்பு
உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிரணியினர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.;
புதுடெல்லி,
மகளிருக்கான 13-வது ஒரு நாள் உலகக் கோப்பைத் தொடரின் இறுதி ஆட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் திடலில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்றது.
இந்த நிலையில், இந்திய அணியை வாழ்த்துவதற்காக பிரதமர் மோடி, வீராங்கனைகளை டெல்லியில் உள்ள தனது இல்லத்துக்கு அழைத்திருந்தார். அதன்படி, மும்பையில் விமான நிலையத்தில் இருந்து இந்திய அணியினர் நேற்று டெல்லி வந்தனர்.
இந்த நிலையில் இன்று டெல்லி லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு சென்ற மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் மோடியை சந்தித்தனர். அப்போது, இந்திய மகளிர் அணிக்கு பிரதம மோடி பாராட்டு தெரிவித்தார். மகளிர் உலகக் கோப்பையை வென்ற ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியினர், பிரதமர் மோடியுடன் இணைந்து குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்..பிரதமர் அணி வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.