ஜார்க்கண்ட்: ஒரே குடும்பத்தின் 4 பேர் உள்பட 6 பேர் யானை தாக்கி பலி

ஒரே குடும்பத்தின் 3 பேர் உள்பட 7 பேரை முன்தினம், யானை தாக்கி கொன்றது.;

Update:2026-01-07 14:47 IST

சாய்பாசா,

ஜார்க்கண்டின் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் 2 வேறு இடங்களில் யானை தாக்கியதில் 6 பேர் பலியாகி உள்ளனர். இதுபற்றி சாய்பாசா மண்டல வன அதிகாரி ஆதித்ய நாராயண் செய்தியாளர்களிடம் கூறும்போது, கடந்த சில நாட்களாக அந்த யானை பலரை தாக்கி வந்தது.

இந்நிலையில், நேற்றிரவு நோவாமுண்டி மற்றும் ஹத்கமரையா ஆகிய பகுதிகளுக்குள் நுழைந்துள்ளது. இதில் யானை தாக்கியதில் ஒரே குடும்பத்தில் 4 பேர் உயிரிழந்தனர். தவிர 2 பேர் பலியானார்கள். 4 பேர் யானை தாக்கியதில் காயமடைந்து உள்ளனர் என கூறினார்.

அதற்கு முன்தினம், ஒரே குடும்பத்தின் 3 பேர் உள்பட 7 பேரை யானை தாக்கி கொன்றது. யானைகள் அதிக அளவில் இந்த பகுதிகளில் நடமாடும் சூழலில், பல்வேறு ரெயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்