சத்தீஷ்கார்: 26 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

மூத்த போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எப். அதிகாரிகள் முன்னிலையில் 7 பெண் நக்சலைட்டுகள் உள்பட மொத்தம் 26 பேர் சரண் அடைந்தனர்.;

Update:2026-01-07 15:24 IST

சுக்மா,

சத்தீஷ்காரின் சுக்மா மாவட்டத்தில், 26 நக்சலைட்டுகள் இன்று ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு போலீசில் சரண் அடைந்தனர். அவர்களில் 13 பேருக்கு மொத்தம் ரூ.65 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்காக நடந்த புனர்வாழ்வு தொடக்கம் மற்றும் சமூகத்தில் மறுஒன்றிணைவுக்கான நிகழ்ச்சியில் சுக்மா மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு கிரண் சவான் பங்கேற்று பேசும்போது, மூத்த போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எப். அதிகாரிகள் முன்னிலையில் 7 பெண் நக்சலைட்டுகள் உள்பட மொத்தம் 26 பேர் சரண் அடைந்தனர்.

அவர்கள் மக்கள் விடுதலை கொரில்லா ராணுவ பிரிவை சேர்ந்தவர்கள். தெற்கு பஸ்தார், மாத் மற்றும் ஆந்திரா-ஒடிசா எல்லை பிரிவு பகுதிகளில் செயல்பட்டு வந்தனர். சத்தீஷ்காரின் அபுஜமத், சுக்மா மற்றும் ஒடிசா எல்லையோர பகுதிகளில் பல்வேறு வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்