விவாகரத்து கேட்டு வந்த பெண்ணிடம் அவமரியாதையாக நடந்த நீதிபதியிடம் விசாரணை
துறைரீதியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கேரளா ஐகோர்ட்டு நிர்வாக கமிட்டி உத்தரவிட்டுள்ளது.;
கொச்சி,
கொல்லம் மாவட்ட குடும்பநல கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வருபவர் உதயகுமார். கணவரிடம் விவகாரத்து கேட்டு பெண் ஒருவர், குடும்பநல கோர்ட்டுக்கு வந்தார். அப்போது நீதிபதி உதயகுமார், அந்த பெண்ணை தனது அறைக்கு அழைத்து சென்று அவமரியாதையாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண், இதுகுறித்து மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் புகார் தெரிவித்தார்.
தொடர்ந்து எர்ணாகுளத்தில் உள்ள கேரளா ஐகோர்ட்டு நிர்வாக கமிட்டியை அணுகி புகார் தெரிவித்தார். இதையடுத்து கேரள ஐகோர்ட்டு நிர்வாக கமிட்டி உத்தரவின்பேரில் கொல்லம் மாவட்ட குடும்பநல நீதிபதியாக இருந்த உதயகுமார், வாகன விபத்து விசாரணை கோர்ட்டிற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இந்தநிலையில் இவர் மீது துறைரீதியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கேரளா ஐகோர்ட்டு நிர்வாக கமிட்டி உத்தரவிட்டுள்ளது.