மத்திய பட்ஜெட்டில் கேரளாவின் கோரிக்கைகள் புறக்கணிப்பு: பினராயி விஜயன் கண்டனம்

கேரளாவின் முக்கியமான கோரிக்கைகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.;

Update:2025-02-01 20:18 IST

திருவனந்தபுரம்,

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், கேரளாவின் முக்கியமான கோரிக்கைகளை முற்றிலுமாக புறக்கணித்துள்ளது - வயநாட்டிற்கு உதவி இல்லை, எய்ம்ஸ் இல்லை, விழிஞ்சத்திற்கு ஆதரவு இல்லை.

நமது கடன் வாங்கும் உரிமை வரம்புகள் குறைக்கப்பட்டுள்ளன, தொழில்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளன, விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இது கூட்டாட்சியின் மீதான அப்பட்டமான தாக்குதல், தேசிய நலனை விட சுய நலன்களுக்கு மட்டுமே மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது. இந்த அநீதியை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்