கும்பமேளா அர்த்தமற்றது: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்

கும்பமேளாவே அர்த்தமற்றது என லாலு பிரசாத் யாதவ் எனக்கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2025-02-17 00:41 IST

Photo Credit: PTI

லக்னோ,

டெல்லி ரெயில் நிலையத்தில் கும்பமேளா செல்லும் பயணிகள் அதிக அளவில் திரண்டதால் கடுமையன கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ரயில்களை பிடிக்க பயணிகள் முண்டியடித்ததால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலியாகினர். இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ரெயில்வே துறை மந்திரியும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் நிறுவனருமான லாலு பிரசாத், "கூட்ட நெரிசல் சம்பவம் மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு போதிய ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்பதையே இந்தச் சம்பவம் காட்டுகிறது. இந்தக் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும். இது ரயில்வே துறையின் முழு தோல்வியாகும்" என்றார். மேலும், பிரயாக்ராஜில் நடைபெறும் விழாவுக்கு மக்கள் அதிக அளவில் செல்வது குறித்த கேள்விக்கு பதில் அளித்த லாலு பிரசாத் யாதவ், "கும்பமேளாவே அர்த்தமற்றது" எனப்பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்