ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு - 30 பக்தர்கள் பலி

நிலச்சரிவில் சிக்கிய பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.;

Update:2025-08-27 15:43 IST

ஜம்மு காஷ்மீர்,

ஜம்மு - காஷ்மீரில் கிஷ்த்வர் மற்றும் தோடா மாவட்டங்களில் திடீரென பெய்த கனமழையால் திரிகூட மலையின் உச்சியில் உள்ள புனிதத் தலமான வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்லும் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். நிலச்சரிவில் சிக்கிய பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

பக்தர்கள் கோயிலுக்குப் பயணம் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் தொலைத்தொடர்புச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஜம்மு-ஸ்ரீநகர், கி‌‌ஷ்துவார்-தோடா தேசிய நெடுஞ்சாலைகள் போக்குவரத்துத்குத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரில் அடுத்த ஓரிரு நாள்களுக்குப் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags:    

மேலும் செய்திகள்