வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நாளை மறுதினம் ரஷியா பயணம்

இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது;

Update:2025-11-15 03:39 IST

டெல்லி,

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக நாளை மறுதினம் ரஷியா செல்கிறார். அவர் ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லவ்ரோவை சந்திக்கிறார்.

இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, சர்வதேச அரசியல் சூழ்நிலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.

இந்த சந்திப்பின்போது ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாகவும், உக்ரைன் - ரஷியார் போர் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்