மகாமேளா: மகர சங்கராந்தியை முன்னிட்டு கங்கை நதியில் 21 லட்சம் பேர் புனித நீராடல்

மகர சங்கராந்தியான இன்று, கங்கை நதியில் புனித நீராடுவதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.;

Update:2026-01-15 17:44 IST

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஆண்டுதோறும் மகாமேளா நடத்தப்படுகிறது. இந்த மகாமேளா காலத்தில் அங்கு புனித நதியான கங்கை நதியிலும், திரிவேணி சங்கமத்திலும் பெருந்திரளானோர் புனித நீராடுவது வழக்கம். இதன்படி, கடந்த 3-ந்தேதி பிரயாக்ராஜில் பவுர்ணமி தினத்தில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடல் தொடங்கியது.

இந்த மகாமேளா பிப்ரவரி 15-ந்தேதி வரை 44 நாட்கள் நடைபெறுகிறது. இதில், ஜனவரி 15 (மகர சங்கராந்தி), ஜனவரி 18 (மவுனி அமாவாசை), ஜனவரி 23 (வசந்த பஞ்சமி), பிப்ரவரி 1 (மகி பூர்ணிமா) மற்றும் பிப்ரவரி 15 (மகா சிவராத்திரி) ஆகியவை புனித நீராடல் செய்வதற்கான முக்கிய நாட்கள் ஆகும்.

இதன்படி மகர சங்கராந்தியான இன்று, கங்கை நதியில் புனித நீராடுவதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். கங்கை நதி மற்றும் திரிவேணி சங்கமத்தில் இன்று நள்ளிரவு தொடங்கி காலை 8 மணி வரை சுமார் 21 லட்சம் பேர் புனித நீராடினர். இன்று இரவுக்குள் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானோர் கங்கையில் புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்