மராட்டிய உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு: உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு
தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.;
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் உள்ள 29 மாநகராட்சிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7.30 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5.30 மணிவரை நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
தேர்தலில் பாஜக, காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தரப்பு), சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே தரப்பு) தேசியவாத காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில், மராட்டிய உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக சிவசேனா (உத்தவ் தரப்பு) தலைவர் உத்தவ் தாக்கரே குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
மராட்டிய உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளது. ஜனநாயகத்தை கொலை செய்ய முயற்சிகள் நடைபெற்றுள்ளது. மாநில தேர்தல் ஆணையர் ஆளும் பாஜக அரசுடன் கூட்டணி வைத்து செயல்படுகிறார். மாநில தேர்தல் ஆணையம் அரசியல் சாசனத்திற்கு விரோதமானதாக உள்ளது. மாநில தேர்தல் ஆணையர் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்
என்றார்.