பிரபல நடிகை ஊர்மிளா உன்னி பா.ஜனதாவில் இணைந்தார்
பிரபல நடிகை ஊர்மிளா உன்னி பா.ஜனதாவில் இணைந்தார்.;
திருவனந்தபுரம்,
மலையாள பிரபல நடிகை ஊர்மிளா உன்னி. நாட்டிய கலைஞராகவும் உள்ளார். இவர் கொச்சியில் நடைபெற்ற பா.ஜனதா நிகழ்ச்சியில், கேரள மாநில பா.ஜனதா துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தார். அவருக்கு பா.ஜனதா உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சினிமா தயாரிப்பாளர் சுரேஷ்குமார் கலந்துகொண்டார்.
இதுகுறித்து நடிகை ஊர்மிளா உன்னி கூறும்போது, எனது அரசியல் பயணத்தை பா.ஜனதாவில் இருந்து தொடங்குகிறேன். சமூக, கலாசார துறையில் தீவிரமாக ஈடுபட்டு இருந்த நான் மோடியின் ஆதரவாளர். பா.ஜனதா உடன் எனக்கு ஒரு பிணைப்பு உள்ளது. பா.ஜனதாவில் இணைந்து கட்சியின் வெற்றிக்காக பாடுபட போகிறேன் என்றார்.
கேரளாவில் அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நடிகை பா.ஜனதாவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.