உலகத்தில் 42 நாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடி, இன்னும் மணிப்பூருக்கு செல்லவில்லை - மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

மோடியின் 11 ஆண்டுகால ஆட்சி, பொருளாதாரத்தை அழித்து விட்டது என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.;

Update:2025-07-05 05:15 IST

ஐதராபாத்,

ஐதராபாத்தில், காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது. அதில், அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

பிரதமர் மோடி, உலகில் 42 நாடுகளுக்கு சென்றுள்ளார். ஆனால் மணிப்பூருக்கு இதுவரை செல்லவில்லை. அங்கு மக்கள் செத்துக் கொண்டிருக்கின்றனர். பிரதமருக்கு யாராவது ஒரு தொப்பியும், பதக்கமும் கொடுத்தால், அதை அணிந்து கொண்டு எங்கு வேண்டுமானாலும் செல்வார். அவரது வெளியுறவு கொள்கை தவறானது. அதனால், அனைத்து மூலைகளிலும் நமக்கு எதிரிகள் உருவாகி விட்டனர். ஒருபுறம் சீனா, மறுபுறம் பாகிஸ்தான் இருக்கின்றன. நேபாளம் கூட நம்மிடம் இருந்து விலகி விட்டது. எல்லோரும் நம்மை விட்டு சென்று கொண்டிருக்கிறார்கள்.

மோடியின் 11 ஆண்டுகால ஆட்சி, பொருளாதாரத்தை அழித்து விட்டது. அரசியல் சாசனத்தையும் அழித்து விட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்