பிரதமர் மோடி, உ.பி. முதல்-மந்திரி குறித்து சர்ச்சை கருத்து; இளைஞர் கைது
பவன்பூர் போலீஸ் நிலையத்தில் மணிபால் சவுகான் என்பவர் புகார் அளித்தார்.;
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் ரசூல்பூர் அவுரங்காபாத் கிராமத்தை சேர்ந்த இளைஞர் இஷ்ரத் கான் (வயது 26). இவர் பிரதமர் மோடி, உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்டார். ஆபாச வார்த்தைகளால் பிரதமர் மோடி, உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை விமர்சித்து இளைஞர் பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.
இது குறித்து பவன்பூர் போலீஸ் நிலையத்தில் மணிபால் சவுகான் என்பவர் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று இஷ்ரத் கானை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.