சிறுமி பாலியல் வன்கொடுமை; தலைமறைவாக இருந்த தந்தை கைது
பாலியல் வன்கொடுமை குறித்து சிறுமி கடந்த ஜனவரி மாதம் போலீசில் புகார் அளித்துள்ளார்.;
கவுகாத்தி,
அசாம் மாநிலம் கசா மாவட்டம் உத்தர்பாண்ட் கிராமத்தை சேர்ந்த நபருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். மேலும், இந்த தம்பதிக்கு 16 வயதில் மகளும், 13 வயதில் மகனும் உள்ளனர்.
இதனிடையே, கடந்த 2022ம் ஆண்டு அந்த நபர் தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இதுகுறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். தந்தை பாலியல் வன்கொடுமை செய்ததில் கர்ப்பமான சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில், பாலியல் வன்கொடுமை குறித்து சிறுமி கடந்த ஜனவரி மாதம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து சிறுமியின் தந்தை தலைமறைவானார். சுமார் ஓராண்டுகள் தலைமறைவாக இருந்த தந்தையை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரின் பெயர் உள்ளிட்ட எந்த விவரமும் வெளியாகவில்லை.