பத்மநாபசுவாமி கோவிலுக்குள் ஸ்மார்ட் கிளாஸ் அணிந்து வந்த நபர் கைது

கோவிலுக்குள் கேமரா பொருத்தப்பட்ட கண்ணாடிகள் போன்ற மின்னணு சாதனங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-07-07 14:43 IST

திருவனந்தபுரம்,

குஜராத் மாநிலத்தை சேர்ந்த 66 வயதான சுரேந்திர ஷா என்பவர், கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது அவர் கேமராவுடன் கூடிய 'ஸ்மார்ட் கிளாஸ்' எனப்படும் கண்ணாடியை அணிந்து கோவிலுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.

அவரை பார்த்து சந்தேகமடைந்த கோவில் ஊழியர்கள், அவரை அழைத்து சோதனை செய்தனர். அப்போது அவர் அணிந்திருந்த கண்ணாடியில் கேமரா பொறுத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. பத்மநாபசுவாமி கோவிலுக்குள் கேமரா பொருத்தப்பட்ட கண்ணாடிகள் போன்ற மின்னணு சாதனங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோவில் ஊழியர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கோவிலுக்கு விரைந்து வந்த போலீசார், சுரேந்திர ஷா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உள்நோக்கத்துடன் அவர் இவ்வாறு செய்யவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்