தேசிய வாக்காளர் தினம்: நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

இந்திய தேர்தல் ஆணையத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் எனது பாராட்டுகள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-25 10:23 IST

கோப்புப்படம்

புதுடெல்லி,

பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தேசிய வாக்காளர் தின வாழ்த்துக்கள். இந்த நாள் நமது நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் மீதான நமது நம்பிக்கையை மேலும் ஆழப்படுத்துவதாகும். நமது ஜனநாயக செயல்முறைகளை வலுப்படுத்தும் முயற்சிகளுக்காக இந்திய தேர்தல் ஆணையத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

வாக்காளராக இருப்பது என்பது அரசியலமைப்புச் சலுகை மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் குரல் கொடுக்கும் ஒரு முக்கியமான கடமையாகும். ஜனநாயக செயல்முறைகளில் எப்போதும் பங்கேற்பதன் மூலம் நமது ஜனநாயகத்தின் உணர்வை மதிக்க வேண்டும். இதன் மூலம் ஒரு வளர்ச்சி அடைந்த இந்தியாவின் (விக்சித் பாரத்) அடித்தளத்தை வலுப்படுத்துவோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்