மராட்டியம்: சாலை விபத்தில் 7 பேர் பலி

புனேவில் சுற்றுலா வேன் ஒன்று கடந்த மாதம் கூட்டத்தினர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதில் 12 பேர் காயமடைந்தனர்.;

Update:2025-06-18 22:09 IST

புனே,

மராட்டியத்தின் புனே மாவட்டத்தில் ஜெஜுரி மோர்காவன் சாலையில் சென்று கொண்டிருந்த செடான் கார் ஒன்று லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது.

இதுபற்றி புனே எஸ்.பி. சந்தீப் சிங் கில் கூறும்போது, விபத்தில் 7 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. விபத்திற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை என்றார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் புனே நகரின் சதாசிவ பேட்டை பகுதியில் பவி பள்ளிக்கூடம் அருகே நின்று கொண்டிருந்த கூட்டத்தினர் மீது சுற்றுலா வேன் ஒன்று திடீரென மோதி விபத்து ஏற்படுத்தியது. இதில், 12 பேர் காயமடைந்தனர்.

அவர்களில் பலர் அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு எழுதுவதற்காக வந்த மாணவர்கள் ஆவர். வாகன ஓட்டுநர் குடிபோதையில் இருந்திருக்க கூடும் என முதல்கட்ட விசாரணை தெரிவிக்கின்றது.

Tags:    

மேலும் செய்திகள்