அயோத்தி ராமர் கோவிலில் மொரீசியஸ் பிரதமர் சாமி தரிசனம்

அயோத்திக்கு வந்த மொரீஷியஸ் பிரதமரை உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வரவேற்றார்.;

Update:2025-09-12 13:59 IST

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு தினந்தோறும் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் பல்வேறு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோரும் அயோத்திக்கு அதிக அளவில் வருகை தருகின்றனர்.

அந்த வகையில் மொரீஷியஸ் நாட்டின் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம், இன்று அயோத்தி ராமர் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். அயோத்திக்கு வந்த மொரீஷியஸ் பிரதமரை உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வரவேற்றார்.

முன்னதாக நவீன்சந்திர ராம்கூலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் சென்றார். அவர் செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 16 வரை இந்தியாவில் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். நேற்றைய தினம் அவர் பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்