“மும்பை நகரை.. பாம்பே, பம்பாய் என்று அழைப்பதை நிறுத்துங்கள்..” - நவநிர்மாண் சேனா எச்சரிக்கை

நகரத்தையும், மும்பை மக்களையும் அவமதிக்காதீர்கள் என நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;

Update:2025-09-12 07:54 IST

கோப்புப்படம்

மும்பை,

நவநிர்மாண் சேனா கட்சியின் திரைப்பட பிரிவு தலைவரான அமேயா, நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- நமது நகரத்தின் பெயர் மும்பை. கபில் சர்மாவின் நிகழ்ச்சியில் பல ஆண்டுகளாக இந்த நகரத்தின் பெயர் பாம்பே அல்லது பம்பாய் என குறிப்பிடப்படுகிறது. நாங்கள் இதை எதிர்க்கிறோம். இது ஆட்சேபனை அல்ல, கோபம். சென்னை, பெங்களூரு மற்றும் கொல்கத்தா போன்ற பிற நகரங்களை உங்களால் இதுபோன்று வேறு பெயர்களில் அழைக்க முடியாது. அப்படி இருக்கையில் எங்கள் நகரத்தை மட்டும் ஏன் அவமதிக்க வேண்டும்?

மும்பை மக்கள் உங்களை விரும்புகிறார்கள், உங்கள் நிகழ்ச்சிகளை பார்க்கிறார்கள். மும்பை எங்கள் இதயத்தில் உள்ளது. இந்த நகரத்தையும், மும்பை மக்களையும் அவமதிக்காதீர்கள் என நான் கபில் சர்மாவை எச்சரிக்கிறேன். இது தவறுதலாக நடந்திருந்திருந்தால் தவறை திருத்திக்கொள்ளுங்கள். உங்கள் நிகழ்ச்சியில் யார் வந்தாலும் அவர்கள் பிரபலங்களாக இருந்தாலும் முதலில் மும்பையை பம்பாய் அல்லது பாம்பே என்று அழைக்கவேண்டாம் என்று அவர்களிடம் சொல்லுங்கள். இது நடக்கவில்லையென்றால் நவநிர்மாண் சேனா வலுவான போராட்டத்தை தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கபில் சர்மா தற்போது “தி கிரேட் இந்தியன் கபில் ஷோ”வை தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்