சம்பந்தியுடன் ஓட்டம் பிடித்த பெண்; கணவர் அதிர்ச்சி

சம்பந்தியான சைலேந்திராவுடன் மம்தா ஓட்டம் பிடித்துள்ளார்.;

Update:2025-04-19 07:08 IST

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பாடன் மாவட்ட்டத்தை சேர்ந்தவர் சுனில் குமார். லாரி டிரைவரான இவருக்கு மம்தா (வயது 43) என்ற மனைவியும் 4 பிள்ளைகளும் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு சைலேந்திரா (வயது 46) என்பவரின் மகனுடன் கடந்த 2022ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இதனிடையே, திருமணத்திற்குபின் மூத்த மகளின் மாமனாரும், சம்பந்தியுமான சைலேந்திராவுடன் மம்தாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. லாரி டிரைவரான சுனில் குமார் மாதம் ஒருமுறை மட்டுமே வீட்டிற்க்கு வரும் வழக்கத்தை கொண்டுள்ளார். அவர் வீட்டு செலவிற்கு பணத்தை மட்டும் அனுப்பி வைந்தார்.

இதனிடையே, சம்பந்தி சைலேந்திராவுக்கும், மம்தாவுக்கும் இடையேயான பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. சுனில் குமார் வீட்டில் இல்லாத நேரத்தில் பிள்ளைகளை வேறு அறையில் தங்குமாறு கூறிவிட்டு சைலேந்திராவும், மம்தாவும் ஒரே அறையில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், சம்பந்தியான சைலேந்திராவுடன் மம்தா ஓட்டம் பிடித்துள்ளார். வீட்டில் இருந்த நகை, பணத்தை எடுத்துக்கொண்டு மம்தா தனது கள்ளக்காதலனான சம்பந்தி சைலேந்திராவுடன் ஓட்டியுள்ளார். மனைவி சம்பந்தியுடன் ஓடியது தொடர்பாக மம்தாவின் கணவர் சுனில் குமார் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தியுடன் பெண் ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்