‘பள்ளி பாடப் புத்தகங்களை வெளியிட மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளதாக தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது’ - கேரள கல்வி மந்திரி

ஒப்பந்தத்தில் இருந்து எந்த நேரத்திலும் விலகலாம் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளதாக கேரள மந்திரி சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.;

Update:2025-10-26 17:07 IST

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மத்திய அரசின் பிரதான் மந்திரி பள்ளிகள்(பிஎம் ஸ்ரீ) திட்டத்தில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கேரள அரசு கையெழுத்திட்டது. இந்த விவகாரம் கேரள மாநில அரசியலில் பேசுபொருளாகியுள்ள நிலையில், மத்திய கல்விக் கொள்கை மற்றும் கேரள அரசின் செயல்பாடுகள் குறித்து கேரள கல்வி மந்திரி சிவன்குட்டி விளக்கமளித்து பேசியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவஹ்டு;-

“கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், எந்த நேரத்திலும் ஒப்பந்தத்தில் இருந்து நாம் விலகலாம் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் ஆலோசித்து ஒருமித்த கருத்துக்கு வந்த பின்னரே முடிவு எடுக்கப்படும். ஒருமித்த கருத்துக்கு வர முடியாவிட்டால், நீதிமன்றத்தையும் அணுக எங்களுக்கு சுதந்திரம் உள்ளது.

பள்ளி பாடப் புத்தகங்களை வெளியிட மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளதாக தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. எனவே இது தொடர்பாக எந்தக் கவலையும் தேவையில்லை. இடது ஜனநாயக முன்னணியின் (LDF) கல்விக் கொள்கையில் இருந்து எக்காரணம் கொண்டும் கேரளா பின்வாங்காது.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்