நீட் தேர்வு முடிவு: முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த 6 பேருக்கு இடம்

நீட் தேர்வு மதிப்பெண் பட்டியலில், முதல் 100 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் இடம்பிடித்துள்ளனர்.;

Update:2025-06-14 14:20 IST

கோப்புப்படம் 

புதுடெல்லி,

2025-26-ம் ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் எஸ்.சூர்ய நாராயணன் 99.9987779 சதவீதம் பெற்று மதிப்பெண் தரவரிசையில் 27-வது இடம் பிடித்துள்ளார்.

இதேபோல், அபிநீட் நாகராஜ் 99.9974653 சதவீதம் பெற்று 50-வது இடத்தையும், ஜி.எஸ்.புகழேந்தி 99.9972390 சதவீதம் பெற்று 61-வது இடத்தையும், கே.எஸ்.ஹிருதிக் விஜயராஜா 99.9971484 சதவீதம் பெற்று 63-வது இடத்தையும், ஏ.ஜெ.ராகேஷ் 99.9964242 சதவீதத்துடன் 78-வது இடத்தையும், ஜி.பிரஜன் ஸ்ரீவாரி 99.9958811 சதவீதம் பெற்று 88-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இந்த வகையில், நீட் தேர்வு மதிப்பெண் பட்டியலில், முதல் 100 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் இடம்பிடித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்