நேபாள போராட்டம் தவறாக கையாளப்பட்டது - முன்னாள் பிரதமரின் பேரன் குற்றச்சாட்டு
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது தவறு என்று முன்னாள் பிரதமர் கே.ஐ.சிங்கின் பேரன் யஷ்வந்த் ஷா கூறியுள்ளார்.;
லக்னோ,
நேபாளத்தில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 30 பேரை பலி கொண்ட இந்த போராட்டத்தால் பிரதமர் சர்மா ஒலி பதவியை இழந்துள்ளார். இந்த போராட்டத்தை அரசு தவறாக கையாண்டதாக நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் கே.ஐ.சிங்கின் பேரன் யஷ்வந்த் ஷா குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர்,
‘இந்த போராட்டம், ஊழலுக்கு எதிரானது. நீண்ட காலமாக பல ஊழல் நடந்துள்ளன. அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் விரும்பினார்கள்’ என தெரிவித்தார்.மேலும் அவர், ‘இளம் தலைமுறையினரால் முன்னெடுக்க இந்த போராட்டத்துக்கு பிறகு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளித்தனர்.
மிகப்பெரும் ஆதரவுடன் அமைதியாக நடந்த இந்த போராட்டம் தங்களுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தும் என அரசுக்கு பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. இதனால் போராட்டத்தை தவறாக கையாண்டது. போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது தவறு’ என்று குற்றம் சாட்டினார்.