டெல்லியில் புதிய ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் திறப்பு
டெல்லியில் புதிய ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் திறக்கப்பட்டது.;
புதுடெல்லி,
டெல்லியில் கேசவ் கஞ்சி பகுதியில், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு பிரமாண்டமான புதிய அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது. ரூ.150 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந்த கட்டுமான பணிகள் 8 ஆண்டுகளாக நடந்து வந்தது. 13 மாடிகளை கொண்ட இந்த புதிய அலுவலக கட்டிட திறப்புவிழா ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தலைமையில் நேற்று நடந்தது.
இதில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் பல பா.ஜனதா தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
300 தங்கும் அறைகள் மற்றும் அலுவலக தளங்களை கொண்டது இந்த புதிய கட்டிடம். 75 ஆயிரம் பேரின் நன்கொடையுடன் இந்த கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இந்த கட்டிடத்தில் ஒரு நூலகம், சுகாதார மையம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சூரியசக்தி மின்சார தகடுகள் போன்ற வசதிகளும் உள்ளன.