திருமணமான 6 மாதத்தில் ஐ.டி. ஊழியர் தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்

ஷுபம் நேற்று மதியம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.;

Update:2025-10-08 21:50 IST

சண்டிகர்,

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷுபம் மீனா (வயது 28). இவர் அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவர் டெல்லியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து கடந்த 6 மாதங்களுக்குமுன் திருமணம் செய்துகொண்டார்.

ஷுபம் தனது மனைவியுடன் குருகிராமிலுள்ள நயஹுன் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். ஐ.டி. ஊழியரான ஹுபம் மீனா ஒர்க் பிரம் ஹோம் முறையில் வீட்டில் இருந்து பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், ஷுபம் நேற்று மதியம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவர் நீண்டநேரமாகியும் வீட்டிற்கு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது மனைவி அருகே உள்ள பகுதிகளில் தேடியுள்ளார். பின்னர் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு மாடியில் உள்ள ஜன்னல் கம்பியில் ஷுபம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஷுபத்தின் மனைவி உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் ஷுபத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இந்த தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் ஷுபம் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதற்கான சிகிச்சைக்கள் எடுத்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும், அவர் இதற்குமுன் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் போலீசாரிடம் அண்டை வீட்டார் தெரிவித்துள்ளனர். திருமணமான 6 மாதத்தில் ஐ.டி. ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்