சீன நிறுவனங்களுக்காக விதிகளை தளர்த்த நிதி ஆயோக் பரிந்துரை

24 சதவீத பங்குகள்வரை வாங்க எவ்வித ஒப்புதலும் தேவையில்லை என்றவகையில் விதிகளை தளர்த்துமாறு பரிந்துரை செய்துள்ளது;

Update:2025-07-19 15:30 IST

புதுடெல்லி,

தற்போது, சீன நிறுவனங்கள் இந்திய கம்பெனிகளில் முதலீடு செய்ய வேண்டுமானால், மத்திய உள்துறை, வெளியுறவு ஆகிய அமைச்சகங்களின் பாதுகாப்பு ஒப்புதலை பெற வேண்டும். இதனால், கணிசமான ஒப்பந்தங்கள் தாமதம் ஆவதாக 'நிதி ஆயோக்' அமைப்பு கருதுகிறது.

எனவே, சீன நிறுவனங்கள் இந்திய கம்பெனியில் 24 சதவீத பங்குகள்வரை வாங்க எவ்வித ஒப்புதலும் தேவையில்லை என்றவகையில் விதிகளை தளர்த்துமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை தற்போது பிரதமர் அலுவலம் உள்ளிட்ட அரசின் முக்கிய நிர்வாக துறையின் கீழ் பரிசீலனை உள்ளதாக சொல்லப்படுகிறது. நிதி ஆயோக்கின் பரிந்துரை அப்படியே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அர்த்தம் இல்லை. இதற்கு முன்பாக சில முறை நிராகரிக்கப்பட்டும் இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்