கேரளாவில் அமீபா மூளைக்காய்ச்சலுக்கு மூதாட்டி பலி

அமீபா மூளைக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை கேரளாவில் 31 ஆக உயர்ந்துள்ளது.;

Update:2025-10-30 21:49 IST

திருவனந்தபுரம்,

கேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம், திருவனந்தபுரம், கொல்லம் உள்பட சில மாவட்டங்களில் அமீபா மூளைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் திருவனந்தபுரம் மாவட்டம் சிறையின் கீழ் பகுதியை சேர்ந்த வசந்தா (வயது 77) என்பவர் காய்ச்சல் காரணமாக கடந்த மாதம் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் அமீபா மூளைக்காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் வசந்தாவுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவர் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதைதொடர்ந்து இந்த வருடத்தில் மட்டும் கேரளாவில் அமீபா மூளைக்காய்ச்சல் பாதித்து பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்து இருக்கிறது 

Tags:    

மேலும் செய்திகள்