'ஆபரேஷன் சிந்தூர்' இன்னும் முடியவில்லை - இந்திய விமானப்படை

சரிபார்க்கப்படாத தகவல்களை பரப்பவோ, நம்பவோ வேண்டாம் என்று இந்திய விமானப்படை கேட்டுக்கொண்டுள்ளது.;

Update:2025-05-11 12:57 IST

புதுடெல்லி,

இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்று வந்த தாக்குதல்கள் நேற்று முடிவுக்கு வந்தது. இருந்தும், எல்லை பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய விமானப்படை தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

இந்திய விமானப்படை (IAF) ஆபரேஷன் சிந்தூரில் தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாகவும், தொழில்முறையுடனும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. தேசிய நோக்கங்களுடன் இணைந்து, மற்றும் விவேகமான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

செயல்பாடுகள் இன்னும் நடந்து கொண்டிருப்பதால், சரியான நேரத்தில் விரிவான விளக்கவுரை நடத்தப்படும். சரிபார்க்கப்படாத தகவல்களை பரப்பவோ, நம்பவோ வேண்டாம் என்று இந்திய விமானப்படை கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்