ஜன.12-ல் 'சத்யாகிரகப் போராட்டம்' பினராயி விஜயன் அறிவிப்பு

கேரள மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிதிப்பங்கீட்டில் மத்திய அரசு தடை விதிப்பதாக பினராயி விஜயன் குற்றம்சாட்டி உள்ளார்.;

Update:2026-01-08 21:11 IST

திருவனந்தபுரம்

கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில், இடதுசாரி முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்தநிலையில், கேரள மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிதிப்பங்கீட்டில் மத்திய அரசு ‘நிதித் தடைகளை‘ விதிப்பதாகக் குற்றம் சாட்டி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வரும் ஜனவரி 12-ஆம் தேதி அன்று மாபெரும் சத்யாகிரகப் போராட்டத்தை அறிவித்துள்ளார்.

இந்த அறப்போராட்டத்தில் கேரள மாநில அமைச்சர்கள், இடதுசாரி முன்னணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனர். முன்னதாக 2019 டிசம்பர் 16-ந் தேதி மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக திருவனந்தபுரத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பினராயி விஜயன் பங்கேற்றார்.

2024-ம் ஆண்டு பிப்ரவரியில், மத்திய அரசின் கூட்டாட்சி மீதான தாக்குதலையும் கேரளாவிற்கான நிதிப் புறக்கணிப்பையும் கண்டித்து டெல்லியில் நடத்தப்பட்ட போராட்டத்துக்கு பினராயி விஜயன் தலைமை தாங்கினார். அப்போராட்டத்தில் கேரள மந்திரிகள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்