பெரியாரின் 147வது பிறந்தநாள்- பினராயி விஜயன் வாழ்த்து

தந்தை பெரியாரின் 147வது பிறந்த நாளை முன்னிட்டு கேரளா முதல் மந்திரி பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update:2025-09-17 12:51 IST

திருவனந்தபுரம் ,

தந்தை பெரியாரின் 147-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை 'சமூக நீதி நாள்’ ஆக தமிழ்நாடு அரசு 2021-ல் அறிவித்திருந்தது. இந்நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தந்தை பெரியாரின் 147வது பிறந்த நாளை முன்னிட்டு கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

பெரியார் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறோம். சாதிய ஒடுக்குமுறை மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிரான அவரது இடைவிடாத போராட்டம் தலைமுறை தலைமுறையாக நமக்கு வழிகாட்டுகிறது. பெரியாரின் பகுத்தறிவு, சமத்துவம் மற்றும் சமூக சீர்திருத்தம் ஆகிய கொள்கைகள், நீதி மற்றும் முற்போக்கான சமூகத்திற்கான நமது போராட்டத்திற்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கின்றன.என தெரிவித்துள்ளார் .

Tags:    

மேலும் செய்திகள்