பீகாரில் ரூ. 40 ஆயிரம் கோடிக்கு வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

பிரதமர் மோடி இன்று பீகாருக்கு சென்றார்.;

Update:2025-09-15 20:37 IST

பாட்னா,

பிரதமர் மோடி இன்று பீகாருக்கு சென்றார். அவர் அம்மாநிலத்தின் பூர்னியா மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் பீகாரில் ரூ. 40 ஆயிரம் கோடி மதிப்புள்ள முடிவுற்ற மற்றும் புதிய வளர்ச்சித்திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பூர்னியா மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட விமான நிலைய முனையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும், பூர்னியா - கொல்கத்தா விமான சேவையையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும், பஹல்பூர் மாவட்டத்தில் ரூ. 25 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய அனல் மின் நிலையம் கட்டுவதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பீகார் முதல்-மந்திரி நிதீஷ் குமார், துணை முதல்-மந்திரி சாம்ராட் சவுதிரி, மந்திரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.      

Tags:    

மேலும் செய்திகள்