அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.;

Update:2025-02-12 15:33 IST

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகர் மஹந்த் சத்யேந்திர தாஸ் உடல்நல குறைவு காரணமாக இன்று காலமானார்.

85 வயதான அவர் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு கடந்த 3ம் தேதி ஆபத்தான நிலையில் சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று காலை அவர் உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், துறவிகள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தலைமை அர்ச்சகர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

தலைமை அர்ச்சகர் மஹந்த் சத்யேந்திர தாசின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மத சடங்குகள் மற்றும் வேதங்களில் நிபுணரான மஹந்த், தனது முழு வாழ்க்கையையும் பகவான் ஸ்ரீ ராமரின் சேவைக்காக அர்ப்பணித்தார். நாட்டின் ஆன்மீக மற்றும் சமூக வாழ்க்கைக்கு அவர் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்பு எப்போதும் பயபக்தியுடன் நினைவுகூரப்படும். இந்த துயர நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் வலிமை அளிக்க கடவுளிடம் பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்