நாளை மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி

மணிப்பூரில் குக்கி-மைதேயி சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.;

Update:2025-09-12 18:40 IST

புதுடெல்லி,

மணிப்பூரில் குக்கி-மைதேயி சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 260க்கும் அதிகமானோர் இதுவரை உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் சொந்த மாநிலத்தில் அகதிகளாக்கப்பட்டிருக்கின்றனர்.நிலைமை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில், அமைதியை மீட்டெடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் மட்டுமல்லாது மணிப்பூர் பாஜக தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி நாளை மணிப்பூர் செல்கிறார்.

மணிப்பூரில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் அவர், அங்கிருந்து மிசோரம், அசாம், மேற்கு வங்கம் மற்றும் பீகாருக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.பிரதமரின் இந்த பயண திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மணிப்பூர் தலைமைச் செயலாளர் புனித் குமார் கோயல்,

பிரதமர் மோடி நாளை மதியம் 12:30 மணியளவில் மிசோரம் மாநிலம் ஐஸ்வாலில் இருந்து சூராசந்த்பூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். அங்கு அவர் மைதேயி மற்றும் குக்கி சமூகத்தினரிடையே நடந்த மோதல்களால் இடம்பெயர்ந்த மக்களுடன் உரையாடவுள்ளார். மேலும், மாநிலம் முழுவதும் ரூ.7,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.அமைதி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவார் என்று கூறியிருக்கிறார்.

சூராசந்த்பூர் மாவட்டம் மிகவும் முக்கியமான பகுதியாகும். மணிப்பூர் கலவரத்தால் இந்த மாவட்டம் கடுமையான பாதிக்கப்பட்டிருக்கிறது. இங்கு குக்கி சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

சூராசந்த்பூரில் இருந்து பிரதமர், மதியம் 2:30 மணியளவில் மாநில தலைநகர் இம்பாலுக்குப் பயணம் செய்வார். அங்கு அவர் ரூ.1,200 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்து, ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். இம்பாலில் மைதேயி மக்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்