காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு - மக்கள் அவதி
புல்வாமா பகுதியில் இரவு வெப்பநிலை மைனஸ் 2.7 டிகிரி செல்சியசாக காணப்பட்டது.;
ஜம்மு,
காஷ்மீரில் நேற்று உயரமான மலைப்பகுதிகளில் இரவு முழுவதும் கடுமையான பனிபொழிப்பு நிலவியது. இந்த மாதத்தில் முதல் முறையாக உறைநிலைக்கு மேல் பனிப்பொழி உயர்ந்து காணப்பட்டது. அதன்படி புல்வாமா பகுதியில் இரவு வெப்பநிலை மைனஸ் 2.7 டிகிரி செல்சியசாக காணப்பட்டது. அமர்நாத் யாத்திரையின் முகாம்களான பஹல்காமில் மைனஸ் 2.4 டிகிரி செல்சியசாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், காஷ்மீர் ‘சில்லாய் கலான்’ என்ற 40 நாள் கடுமையான குளிர்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த கடுமையான குளிர் வருகிற 21-ந்தேதி முதல் தொடங்குவதால் லேசான மழை அல்லது பனிபொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக அங்குள்ள மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.