கர்நாடகாவில் தமிழக பஸ் டிரைவரை தாக்க முயன்ற 2 வாலிபர்கள் கைது

ஓசூர் மெயின் ரோட்டில் நேற்று முன்தினம் மாலையில் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்டனர்.;

Update:2025-12-15 00:59 IST

பெங்களூரு,

பெங்களூரு புறநகர் மாவட்டம் அத்திப்பள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஓசூர் மெயின் ரோட்டில் நேற்று முன்தினம் மாலையில் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்டனர்.

இதனை, அதே சாலையில் தமிழகத்தை சேர்ந்த ஒரு தனியார் பஸ்சை ஓட்டிச் சென்ற டிரைவர் கவனித்தார். உடனே அவர், 2 வாலிபர்களுக்கும் அறிவுரை கூறினார். உடனே அந்த பஸ்சை பின்தொடர்ந்து சென்ற வாலிபர்கள், அத்திப்பள்ளியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் டீசல் நிரப்பிக் கொண்டிருந்த தமிழக தனியார் பஸ் டிரைவரை 2 வாலிபர்களும் தாக்க முயன்றனர்.

இதனை சிலர் செல்போனில் வீடியோ எடுத்திருந்தனர். மேலும் இது தொடர்பாக அத்திப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகாரும் அளித்தனர். இதையடுத்து தமிழக டிரைவரை தாக்க முயன்றதாக கம்மசந்திராவை சேர்ந்த சரண், மதன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்