சத்ரபதி சிவாஜி வளமான இந்தியாவை கட்டியெழுப்ப நம்மை ஊக்குவிக்கிறார் - பிரதமர் மோடி

சத்ரபதி சிவாஜியின் தைரியம் மற்றும் நீதியின் மதிப்புகள் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தியது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.;

Update:2025-02-19 10:17 IST

புதுடெல்லி,

முகலாயர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் சவாலாக திகழ்ந்த மராட்டிய மாமன்னன் சத்ரபதி சிவாஜியின் ஆட்சிகாலம் தென்னிந்திய வரலாற்றின் பொற்காலம் என கருதப்படுகிறது. இத்தகைய சிறப்புகளை பெற்ற மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 395வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பிறந்தநாளையொட்டி சத்ரபதி சிவாஜிக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சத்ரபதி சிவாஜியின் வீரமும் தொலைநோக்குத் தலைமையும் சுயராஜ்யத்திற்கு அடித்தளமிட்டன, தைரியம் மற்றும் நீதியின் மதிப்புகள் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தியது. அவர் ஒரு வலுவான, தன்னம்பிக்கை மற்றும் வளமான இந்தியாவை கட்டியெழுப்ப நம்மை ஊக்குவிக்கிறார் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்