பிரதமர் மோடிக்கு போதி தர்மர் பொம்மை பரிசளிப்பு

பிரதமர் மோடிக்கு போதி தர்மர் பொம்மை பரிசளிக்கப்பட்டது.;

Update:2025-08-30 08:33 IST

டோக்கியோ,

தமிழகத்தின் காஞ்சீபுரத்தில் இருந்து ஜப்பான் சென்ற துறவியான போதி தர்மரின் மரபை அடிப்படையாக கொண்ட தருமா பாரம்பரியம் ஜப்பானில் புகழ்பெற்று விளங்குகிறது. ஜப்பானில் போதி தர்மர், தருமா டைஷி என அழைக்கப்படும் நிலையில், அவரது மாதிரியாக வடிவமைக்கப்படும் தருமா பொம்மைகள் மங்களகரமான மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை வழங்கும் புனித பொருளாக அங்கு பார்க்கப்படுகிறது.

2 நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு இந்த தருமா பொம்மையை டோக்கியோவில் உள்ள ஷோரிங்ஜன் தருமா-ஜி கோவில் தலைமை குரு பரிசாக வழங்கினார். முன்னதாக ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின், இந்தியாவின் சந்திராயன்-5 திட்டத்தை இரு நாடுகளும் இணைந்து செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்படி ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஜாக்சா அனுப்பும் விண்கலத்தில் இஸ்ரோவின் லேண்டர் மற்றும் ஜப்பானின் ரோவரும் இடம்பெறும். சந்திரயான்-5 திட்டத்தில் நிலவின் தென் துருவத்தில் நீர் உள்பட ஆவியாகும் பொருட்கள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்