இளைஞர்கள் சமூக ஊடகங்களில் அடிமையாக இருக்க பிரதமர் மோடி விரும்புகிறார் -ராகுல்காந்தி குற்றச்சாட்டு

கல்வி, வேலைவாய்ப்பு பிரச்சினை குறித்து கேள்வி கேட்காமல் இருக்க இளைஞர்கள் சமூக ஊடகங்களில் அடிமையாக வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார் என ராகுல்காந்தி கூறினார்.;

Update:2025-11-04 21:38 IST

அவுரங்காபாத்,

பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் நடந்த ஒரு தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:- பிரதமர் சமூக ஊடகங்களில் போதை பழக்கத்தை ஊக்குவிக்கிறார். இளைஞர்கள் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் இவைகளுக்கு அடிமையாக வேண்டும் என்று விரும்புகிறார். அதில் ரீல்களை உருவாக்குவதில் மும்முரமாக இருக்க விரும்புகிறார். இளைஞர்கள் தொடர்ந்து திசை திருப்பப்படுகிறார்கள்.

இளைஞர்கள் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு தனது அரசை கேள்வி கேட்க கூடாது என்பதற்காக அவர் அத்தகைய சூழ்நிலையை விரும்புகிறார். பீகாரில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி முதல்-மந்திரி நிதிஷ் குமார் 20 ஆண்டுகளில் இளைஞர்களை தொழிலாளர்களாக மாற்றி உள்ளார். வினாத்தாள் கசிவு பீகாரில் சாதாரணமாக இருக்கிறது. இது நிதி ரீதியாக பணக்கார மாணவர்களுக்கு பயனளிக்கிறது” இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்