ஆபாச வீடியோ விவகாரம்: காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ.வின் உதவியாளர் கைது

ஆபாச வீடியோ விவகாரத்தில் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ.வின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.;

Update:2025-10-30 09:44 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நயனா மோட்டம்மா. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவரின் உதவியாளராக இருப்பவர் ஆதித்யா.

இவர் சிக்கமகளூரு ஆதிசக்தி நகரில் வசித்து வரும் ஒரு பெண்ணின் ஆபாச படங்கள், வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி வந்துள்ளார். மேலும் அந்த வீடியோ, படங்களை அந்த பெண்ணின் உறவினர்கள், குடும்பத்தினருக்கும் ஆதித்யா அனுப்பி வைத்து பெண்ணுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் சிக்கமகளூரு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதித்யாவை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்