பாட்னா எய்ம்ஸ் விடுதியில் முதுநிலை மருத்துவ மாணவர் தற்கொலை

பாட்னா எய்ம்ஸ் விடுதியில் முதுநிலை மருத்துவ மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், நடந்த முதல்கட்ட விசாரணையில் இது தற்கொலையாக இருக்க கூடும் என போலீசார் கூறினர்.;

Update:2025-07-20 12:25 IST

பாட்னா,

ஒடிசாவை சேர்ந்தவர் யத்வேந்திர சாஹு என்ற அம்ரித்யா அரவிந்த். பீகாரின் பாட்னா நகரில் உள்ள பாட்னா எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் முதுநிலை மருத்துவ படிப்பில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதற்காக பாட்னா எய்ம்ஸ் விடுதியில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், சம்பவத்தன்று அந்த மாணவர் தனது அறையின் உள்ளே சென்று கதவை பூட்டி கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால், அவருடைய நண்பர்கள் சந்தேகமடைந்து எய்ம்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுபற்றிய தகவல் புல்வாரி ஷெரிப் காவல் நிலையத்திற்கு சென்றதும், போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று, விடுதியின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது மாணவர் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். முதல்கட்ட விசாரணையில் இது தற்கொலையாக இருக்க கூடும் என கூறினார். எனினும், பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும் என்றார்.

இந்த சம்பவம் எய்ம்ஸ் மாணவர்கள் மத்தியில் ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விஷயம் பற்றி எய்ம்ஸ் நிர்வாகம் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. மாணவரின் குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்