போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்க வாடிகன் புறப்பட்டார் ஜனாதிபதி முர்மு

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் கடந்த 21ம் தேதி உயிரிழந்தார்.;

Update:2025-04-25 08:32 IST

டெல்லி,

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (வயது 88) உடல்நலக்குறைவால் கடந்த 21ம் தேதி உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, போப் பிரான்சிஸ் உடல் வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் பொதுமக்கள், உலக நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் வாடிகன் புறப்பட்டு சென்றார். ஜனாதிபதியுடன் மத்திய மந்திரிகள் கிரன் ரிஜிஜு, ஜார்ஜ் குரியன், கோவா சட்டசபை துணை சபாநாயகர் ஜோஸ்வா டி சுசா ஆகியோரும் வாடிகன் புறப்பட்டு சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்