கேரள முன்னாள் முதல்-மந்திரி ஏ.கே. அந்தோணியை சந்தித்த ராகுல் காந்தி

நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரியாகவும் ஏ.கே. அந்தோணி செயல்பட்டுள்ளார்.;

Update:2025-07-18 18:55 IST

திருவனந்தபுரம்,

கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி ஏ.கே. அந்தோணி (வயது 84). காங்கிரஸ் மூத்த தலைவராக இவர் 3 முறை கேரள முதல்-மந்திரியாக செயல்பட்டுள்ளார். மேலும், நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரியாகவும் செயல்பட்டுள்ளார்.

இதனிடையே, வயது முதிர்வு உள்ளிட்ட காரணங்களால் ஏ.கே. அந்தோணி 2022 முதல் அரசியலில் இருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில், கேரளா சென்றுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி இன்று ஏ.கே. அந்தோணியை சந்தித்தார். திருவனந்தபுரத்தில் உள்ள ஏ.கே.அந்தோணி வீட்டிற்கு சென்ற ராகுல்காந்தி அவரின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

கேரள முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டியின் 2ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்க ராகுல் காந்தி கேரளா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்