ராகுல் காந்திக்கு இன்று பிறந்த நாள்: பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ராகுல் காந்தி இன்று தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.;

Update:2025-06-19 08:08 IST

புதுடெல்லி,

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான  ராகுல் காந்தி இன்று தனது 55-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி, ராகுல் காந்திக்கு அரசியல் தலைவர்களும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், தமிழக முதல் அமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது: - கொள்கை சகோதரருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். ரத்தத்தால் அல்ல, சிந்தனை, தொலைநோக்கு பார்வையால் பிணைக்கப்பட்டவர்கள்" என்று தெரிவித்துள்ளார்.  அதேபோல, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "ராகுல் காந்திக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 

 

Tags:    

மேலும் செய்திகள்