ராஜஸ்தான்: கனமழையால் கவிழ்ந்த படகு; வைரலான வீடியோ

ராஜஸ்தானில் டோங்க், சித்தோர்கார் மற்றும் பில்வாரா மாவட்டங்களில் கனமழை பெய்ய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.;

Update:2025-08-23 07:12 IST

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் சவாய் மாதோபூர் பகுதியில் சுர்வால் அணையில் நாட்டு படகு ஒன்றில் 10 பேர் பயணம் செய்தனர். அப்போது, கனமழையால், திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில், படகு வெள்ள நீரில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் படகில் இருந்த அனைவரும் தண்ணீரில் விழுந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து ராஜஸ்தான் பேரிடர் பொறுப்பு படை குழுக்கள் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும், 9 பேர் நீந்தி பாதுகாப்பாக கரை சேர்ந்தனர். அந்த மாவட்டத்தில் மிக பெரிய அணையாக சுர்வால் உள்ளது. பல கால்வாய்கள் மற்றும் ஆறுகளில் இருந்து நீர் வந்து சேரும் அணையாக உள்ளது.

கனமழையால், நீர்மட்டம் அணைக்கு அதிகரித்துள்ளது. இதில் படகு கவிழ்ந்துள்ளது. மீட்பு படையினர் வெள்ளத்தில் சிக்கி தவித்த ஒருவரை மீட்டனர். இதுபற்றிய வீடியோ ஒன்று வைரலானது.

கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால், ரெயில் தண்டவாளங்களில் 2 அடி உயரத்திற்கு நீர் தேங்கி காணப்பட்டது. இதனால், ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டது. கோட்டா மற்றும் பண்டி மாவட்டங்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால், ஞாயிற்று கிழமை வரை பள்ளிகளை மூடும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

இதுதவிர, டோங்க், சித்தோர்கார் மற்றும் பில்வாரா மாவட்டங்களில் கனமழை பெய்ய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்