கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' - வானிலை மையம் எச்சரிக்கை

திருச்சூர், பாலக்காடு உள்பட 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ‘ஆரஞ்ச அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.;

Update:2025-07-19 19:06 IST

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. வயநாடு மற்றும் கோழிக்கோடு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. மழைக்கால விபத்துகளை தடுக்கும் வகையில் பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள காசர்கோடு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், இன்றைய தினம் கேரளாவில் உள்ள 5 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி வயநாடு, கோழிக்கோடு, காசர்கோடு, கண்ணூர் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

அதே சமயம் எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான 'ஆரஞ்ச அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. மலையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனமழையோடு காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும் என்பதால், கேரள கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்