பணியின்போது வகுப்பறையில் உறங்கிய ஆசிரியை - வைரல் வீடியோ
ஆசிரியை உறங்குவதை மாணவர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர்.;
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் கிருஷ்ணபுரியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், அந்த பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியை பணியின்போது வகுப்பறையில் உறங்கியுள்ளார். வகுப்பறையில் மாணவ, மாணவியருக்கு பாடம் கற்றுக்கொடுக்காமல் ஆசிரியை உறங்கியுள்ளார். ஆசிரியை உறங்குவதை மாணவர்கள் சிலர் தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதையடுத்து வகுப்பறையில் உறங்கிய ஆசிரியையிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியை மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.