ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாமில் பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.;
ஜம்மு.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள கமல்கோட் ராணுவ முகாமில் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த நாயக் பி.டி. ராவ் (25) துப்பாக்கியால் சுட்டு காயங்களுடன் உயிரிழந்து கிடந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராணுவ வீரர் வைத்திருந்த துப்பாக்கியில் 2 குண்டுகள் சுடப்பட்டு கிடந்ததாக கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில் அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இருப்பினும் ஸ்ரீநகரைச் சேர்ந்த பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் இந்த சம்பவம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து ராணுவ உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.